20 July 2013

'அ' பதிவேட்டில் ('A' Register) என்றால் என்ன?

'அ' பதிவேட்டில் இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

  1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
  2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந),புன்செய் (பு),மானாவாரி (மா),தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த),  புறம்போக்கு
  3. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
  4. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

02 July 2013

வீடு

வீடு கட்டுவதற்கு நாம் நிலம் வாங்குவதாக இருந்தால், நல்ல சாலை, போக்குவரத்து, குடிநீர் வசதி, கடைகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

01 July 2013

சொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

அன்பு நண்பர்களே,


       மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் பெயரில் ஏதேனும் ஒரு சொத்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஏதோ ஒரு இடத்தில் கையளவு நிலம் வாங்கிப் போட்டால் அது தரும் பெருமித உணர்ச்சியே வேறு. நிலம் வாங்கியவர்களுக்கு அடையாளம் என்று ஒன்று கிடைத்து விடும். இன்றைய கால கட்டத்தில் சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

      வருவாய்த் துறை (Revenue Department) கீழ் இருக்கும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தான் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்.

1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)