ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
20 August 2013
02 August 2013
சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்:
பலரும் சொத்துகளை வாங்கும்போது, அதை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்து கொள்கின்றனர். தங்களது சொத்து பத்திரமாக உள்ளதாக கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு பதிவு செய்தல் அந்த சொத்தை வருவாய் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள்கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களை பெற்று, ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மனுதாரர், தனது மனுவுடன், ஆவனங்களின் செராக்ஸ் பரிதியை அளித்தால் போதும், எவ்வித கட்டணமும் வேண்டியதில்லை. மூல ஆவணங்களை கொடுக்க வேண்டியதில்லை.
கிராம நிர்வாக அலுவலர், நிர்வாக காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய் தோறும் பட்டா மாற்றத்துக்கான மனுக்களை பெற வேண்டும். விண்ணப்பித்த தேதியில் இருந்து இரண்டாவது வெள்ளிகிழமையன்று, தாசில்தார் அலுவகத்திற்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும். இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன் முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்த சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கைஎழுத்திட வேண்டும். அன்றைய தினமே அலுவலக கணினியில், மனுவின் விவரத்தை துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
ஆவணக்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரீசீலீத்து, 2வது வெள்ளிகிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு 15 நாள்களில் பட்டா மாற்றம் செய்யவேண்டும். உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா என்றால் விண்ணப்பித்த தேதியில் இருந்து நான்காவது வெள்ளிகிழமை பட்டா உத்திரவை பெற வேண்டும். இதை பயன்படுத்தி சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் செராக்ஸ் பிரிதிகளுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து விரைவில் பட்டா பெற்று கொள்வதே சிறந்தது..........
Subscribe to:
Posts (Atom)