Patta |
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வாங்கிய இடத்தில் சி.எம்.டி.ஏ. அப்ரூவல் பெற்று வீடு கட்டி குடியிருக்கிறேன். தற்போது அந்த இடத்திற்கு பட்டா வாங்கலாம் என்றால், கிராம நத்தம் பகுதியில் உள்ளது அதனால் பட்டா வழங்க இயலாது என தெரிவிக்கின்றனர். அந்த இடத்திற்கு பட்டா வாங்க நடைமுறை என்ன?
''பட்டா பெற நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன் 25 வருட அனுபவ பாத்தியதை, சி.எம்.டி.ஏ. அப்ரூவல் இவற்றைக் குறிப்பிட்டு கிரயப் பத்திர நகல் இணைத்து அந்த ஆவணங்களை நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் சான்றொப்பம் வாங்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் பட்டா வழங்க கோரும் விண்ணப்பத்தில் ரூபாய் 10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லைத் தாள் ஒட்டி தாசில்தார் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து, அக்கம் பக்கத்தில் விசாரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பார்.''
தாத்தா பெயர் பட்டாவில் அந்தோணி என்று உள்ளது அவர் பெயர் அந்தோனிமுத்து நான் என் பெயருக்கு எழுத என்ன செய்ய வேண்டும் தாத்தா இறப்பை பதியவில்லை நான் என்ன செய்ய வேண்டும்
ReplyDeleteஎன் பூர்விகா சொத்தில். என் சின்ன தாத்தா பெயரில் பட்டா இருக்கு என் அனுபவத்தில் இருக்கு இதில் என் பெயரை கூட்டு பட்டாவில் இணைக்க முடியுமா
ReplyDelete