13 August 2014

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?


வாரிசுச் சான்றிதழ் 

சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற் றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை மாற்றித்தருவோம் என்று சொல்லிவிட்டது. 

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?

அது ஏன் முக்கியம்? என்பதே பலருக்கும் தெரியாத நிலையில், நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான் றிதழ் என்றால் என்ன? வாரிசுச் சான்றி தழுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படி வாங்க வேண்டும்? என்கிற கேள்விகள் பலருக்கும் உண்டு. இந்த கேள்விக்களுக்கு சட்டப்பூர்வமான விள க்கம் தருகிறார் வழக்கறிஞர் ரமேஷ். ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்க ளையோ அல்லது பணப்பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகப் பெறப்படும் சான் றிதழ்தான் வாரிசுச் சான்றிதழ். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திரு மணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

இதை எப்படி பெறுவது?

சாதி சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ, அதுதான் வாரிசுச் சான் றிதழ் வாங்குவதற்கும். வட்டாட்சியர் அலு வலகத்தில் உரிய மனுவுடன் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் வசிப்பிடச்சான் று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர் வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய் வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சி யரால் வழங்கப்படும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடை யே பிரச்னைகள் இருப்பது, தத்து எடு க்கப் பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவ து, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி யாரு க்கு வாரிசுச் சான்றிதழ் வழங் குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம். ஏனெனி ல், யார் வாரிசு என் பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வட் டாட்சியருக்கு கிடையாது. பிரச்னைக்குரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி இறந்தவ ருக்கும் தனக்கும் இருக்கும் உறவை நிரூபித்து, அவரது வாரிசு என்று கோரும் தகுதியை உணர் த்துவதன் மூலமே அவர் பெயருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.

எதற்கு வாரிசுச் சான்றிதழ்?

பட்டா போன்ற வருவாய் ஆவ ணங்களில் பெயர் மாற்றம் செய் வதற்கு, பொதுத் துறை நிறுவன ங்களில் அல்லது அரசுப் பணி களில் பணிபுரிந்து இறந்தவர்க ளின் குடும்ப ஓய்வூதியம் மற்று ம் பணி பலன்கள் பெறுவதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமா கிறது.நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப்பெறுவ தற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய் ப்பு பெறவும் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்ப தற்கோ, அடமானம் வைப்பதற்கோ உள்ள வாரிசு உரிமையை காண் பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப் படும்.


இறங்குரிமை சான்றிதழ்

இறந்த நபரின் பெயரிலுள்ள முத லீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வ மான உரிமை இருக்கிறது என்ப தைக் காண்பிக்க ஒருவர் நீதிமன் றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந் த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குக ள்/முதலீடுகள் முதலிய வற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட் டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்க ளா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத் தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்க ளில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்ப தை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத் தினால் நீதிமன்றம் அவர்களுக் கு இறங்குரிமை சான்றிதழ் வழ ங்கும். அந்த இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் நிறு வனங்கள் முதலீடுகளை/ பங்கு களை பெயர் மாற்றமோ அல்ல து பணத்தை திருப்புவதையோ தயக்கமில்லாமல் செய்து தரும்.

இறந்த வருடைய வீடு, நிலம் போ ன்ற அசையாச் சொத்துகளை அடைவதற்கு அல்லது அடமானம் வைப்பதற்கு இறங்குரிமை சான்றிதழ் தேவையில்லை. வாரிசுச்சான்றிதழ், இறங்குரிமை சான்றித ழை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் இப்போது புரிந்ததா?



நன்றி,...............

KuttySurya
http://kuttysurya.blogspot.in/2012/12/blog-post_9789.html

1 comment:

  1. Easy "water hack" burns 2 lbs OVERNIGHT

    Well over 160,000 women and men are hacking their diet with a simple and SECRET "liquids hack" to burn 1-2 lbs each and every night in their sleep.

    It is easy and it works all the time.

    This is how to do it yourself:

    1) Go grab a glass and fill it up half full

    2) Now learn this weight losing hack

    and be 1-2 lbs skinnier the very next day!

    ReplyDelete