13 August 2014

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?


வாரிசுச் சான்றிதழ் 

சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற் றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை மாற்றித்தருவோம் என்று சொல்லிவிட்டது. 

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?

அது ஏன் முக்கியம்? என்பதே பலருக்கும் தெரியாத நிலையில், நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான் றிதழ் என்றால் என்ன? வாரிசுச் சான்றி தழுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படி வாங்க வேண்டும்? என்கிற கேள்விகள் பலருக்கும் உண்டு. இந்த கேள்விக்களுக்கு சட்டப்பூர்வமான விள க்கம் தருகிறார் வழக்கறிஞர் ரமேஷ். ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்க ளையோ அல்லது பணப்பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகப் பெறப்படும் சான் றிதழ்தான் வாரிசுச் சான்றிதழ். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திரு மணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

இதை எப்படி பெறுவது?

சாதி சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ, அதுதான் வாரிசுச் சான் றிதழ் வாங்குவதற்கும். வட்டாட்சியர் அலு வலகத்தில் உரிய மனுவுடன் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் வசிப்பிடச்சான் று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர் வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய் வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சி யரால் வழங்கப்படும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடை யே பிரச்னைகள் இருப்பது, தத்து எடு க்கப் பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவ து, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி யாரு க்கு வாரிசுச் சான்றிதழ் வழங் குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம். ஏனெனி ல், யார் வாரிசு என் பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வட் டாட்சியருக்கு கிடையாது. பிரச்னைக்குரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி இறந்தவ ருக்கும் தனக்கும் இருக்கும் உறவை நிரூபித்து, அவரது வாரிசு என்று கோரும் தகுதியை உணர் த்துவதன் மூலமே அவர் பெயருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.

எதற்கு வாரிசுச் சான்றிதழ்?

பட்டா போன்ற வருவாய் ஆவ ணங்களில் பெயர் மாற்றம் செய் வதற்கு, பொதுத் துறை நிறுவன ங்களில் அல்லது அரசுப் பணி களில் பணிபுரிந்து இறந்தவர்க ளின் குடும்ப ஓய்வூதியம் மற்று ம் பணி பலன்கள் பெறுவதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமா கிறது.நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப்பெறுவ தற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய் ப்பு பெறவும் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்ப தற்கோ, அடமானம் வைப்பதற்கோ உள்ள வாரிசு உரிமையை காண் பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப் படும்.


இறங்குரிமை சான்றிதழ்

இறந்த நபரின் பெயரிலுள்ள முத லீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வ மான உரிமை இருக்கிறது என்ப தைக் காண்பிக்க ஒருவர் நீதிமன் றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந் த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குக ள்/முதலீடுகள் முதலிய வற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட் டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்க ளா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத் தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்க ளில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்ப தை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத் தினால் நீதிமன்றம் அவர்களுக் கு இறங்குரிமை சான்றிதழ் வழ ங்கும். அந்த இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் நிறு வனங்கள் முதலீடுகளை/ பங்கு களை பெயர் மாற்றமோ அல்ல து பணத்தை திருப்புவதையோ தயக்கமில்லாமல் செய்து தரும்.

இறந்த வருடைய வீடு, நிலம் போ ன்ற அசையாச் சொத்துகளை அடைவதற்கு அல்லது அடமானம் வைப்பதற்கு இறங்குரிமை சான்றிதழ் தேவையில்லை. வாரிசுச்சான்றிதழ், இறங்குரிமை சான்றித ழை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் இப்போது புரிந்ததா?



நன்றி,...............

KuttySurya
http://kuttysurya.blogspot.in/2012/12/blog-post_9789.html

12 July 2014

வாடகை வீடு சட்டம் என்ன சொல்கிறது?


"ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு )  சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும் (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்.அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. 

மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப்பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.

தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினியர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.


தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை ‘நீ ஓனரே இல்லை’ எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.


தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 ன்படிவீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்ல சட்டம் இருக்கிறது.
தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி -ன் படிவீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.
வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.


இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.


வீட்டைக் காலி செய்ய வைக்க குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.


வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.
பெட்டி செய்தி: அக்ரிமெண்ட் அவசியம்! வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் உறவு நீடித்து நிலைத்து நிற்க, சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு வழக்கறிஞர் வேலுமணி தரும் சட்டப்பூர்வமான ஆலோசனைகள்...


ஒப்பந்தம்


முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.


முன்பணம்


வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.


வாடகை


வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.




நன்றி,...............

http://tntj-attipattu.blogspot.in/

10 July 2014

DTCP அப்ரூவல் என்பது என்ன?

நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நில மாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொ ள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச் சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வே றுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதி கார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும்.
டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனை த்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டீ.டி.சி.பி. அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்து வம் அதிகரிக்கிறது. அதிலு ம், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. அப்ரூ வல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந் த நிலம் எந்த மாவட்டத் தில் உள்ளதோ அந்த மாவ ட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இது தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பி க்க வேண்டும். அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு, மா வட்ட டீ.டி.சி.பி. அலுவலகத் துக்கு அந்த பிளானை அனு ப்பி வைப்பார்கள். டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானை பல்வேறு கட்டங் களில் ஆராய்ந்த பிறகு அத ற்கு அனுமதி கொடுப்பார் கள். சில சமயங்களில் அவர்களே ஒரு பிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.
அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள். அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்ல து உரிமை யாளர் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவ தோடு மட்டுமல்லாமல், அதில் வேறு எந்த மாற்ற மும் செய்யக் கூடாது. அந் த பிளானில் உள்ள படியே பிளாட் (Plot)களை விற்க வே விளம்பரம் செய்ய வோ வேண்டும்.
 24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6 சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில்கட்டடம் கட்டவோ பஞ்சாய த்து அனுமதி தேவைப்படும். அந்த 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல் மட்டு மல்லாது, வேறு எந்தவித மான திட்டங்களுக்கும் அனு மதி வழங்க கிராமப் பஞ்சா யத்துக்கு அதிகாரமே கிடை யாது. அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடைய கட்டுப்பாட்டின்கீழ் வரும். என வே, பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியை வாங்குவது நல்ல விசயம் அல்ல.
விவசாய நிலத்தை மட்டுமல் லாது, உற்பத்தி  / தொழிற்சா லை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிக ளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதி தேவை. சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியி ருப்பு பகுதியாக மாற்ற திட்ட மிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan), நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி. அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விசயத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் தெரிவித்து விட வேண்டும்.
டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத் தைப் பற்றிய தகவல் களையும், அதற்கு ஆட்சேபணைகளை யும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறி விப்பு வெளியிடுவா ர்கள். எந்த ஆட்சேப ணையும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.
நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கட்டப் படுகின்ற கட்டிடத்தின் அருகே உள்ள சாலையின் அகலம், நிலத் தின் அகலம், ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.
இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப் படாது. சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ள சாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடி யும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்க வேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் பிளானு க்கு அனுமதி மறுக்கப்படும்.


நன்றி,...............
http://vidhai2virutcham.com/2012/03/22/d-t-c-p-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/

01 July 2014

வீட்டுக் கடனுக்கான “ வட்டி 2 வகை” இதில் எதைத் தேர்வு செய்வது?

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் இரண்டு வகையான‌ 
வட்டி விகிதம் உள்ள‍து. இதில் எதைத் தேர்வு செய்வது?வீட்டுக்கடன் வாங்கும்போது, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஒரு வங்கிக்கு பல வங்கிகளில் விசாரித்துதான் வாங்கு வோம். ஏனெனில், கடனுக்கான வட்டிவிகிதம் 0.5% குறைவாக இருந்தால்கூட, நீண்டகாலத்தில் சில லட்சம் ரூபாய் மிச்சமாகு ம். வீட்டுக் கடனுக்கான வட்டி விகித சத விகிதத்தைக் கவனிக்கும் அதேநேரத்தி ல், அது மாறுபடும் வட்டி விகிதமா, நி லையான வட்டி விகிதமா என்பதையும் பார்ப்பது அவசியம். இந்த இரண்டில் எந் த வட்டி விகிதம் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மாறும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்),
மாறும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்), ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது கடனுக் கான வட்டி உயர்த்தப் படும். இதேபோல், வட்டி விகிதம் குறைக் கப் படும்போது கடனு க்கான வட்டி குறையு ம்.
நிலையான வட்டி விகிதம்(ஃபிக்ஸட் ரேட்) 
நிலையான வட்டி வி கிதம் (ஃபிக்ஸட் ரேட்) என்பது கடன் வாங்கும் தேதியில் எந்த வட்டி விகிதம் இருக்கிற தோ, அது அப்படியே சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதாவது, ரிச ர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னாலும்,  குறைத்தாலும் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் கு றிப்பிட்ட காலத்துக்கு அப்படியே இருக்கு ம்.
வீட்டுக்கடன் போன்ற பெரியகடனை வா ழ்க்கையில் ஓரிரு முறைதான் வாங்கு வோம். இதை வாங்குவதற்குமுன், எந்தவிதமான வட்டி விகிதத்தைத் தேர்வு செ ய்வது என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது. ஒருமுறை சரியாக முடிவெடுத் துவிட்டால், பிற்பாடு அதுபற்றி கவலைப் படத் தேவையில்லை அல்லவா!
இது http://patta-chitta.blogspot.in/  இணையத்தின் பதிவு அல்ல‍!

17 June 2014

பிற்ப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய வழி

கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சாறிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக்கொள்ளலாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக்கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற்ந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க)இது பெரிய சிக்கலை உருவாக்குக்கு கின்றது.




பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள். குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சாண்றிதழ் இருக்கும் இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும்உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்

பதிவு செய்ய கால கெடு:-

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேன்டும்,

தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமத்திற்கான காரனத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம்

ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை

நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்

பிறப்பு- இறப்பு பதிவாளர்:-

பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் ( கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்)
பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்
நக்ராட்சி பகுதிக்கு ஆணையாளர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)
மாநகராட்சி பகுதிக்கு ஆனையாள்ர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)


நீதிமன்றம் மூலமாக் உத்திரவு பெற

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை ஆனால் நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்

நீதிமன்றத்தில் உத்திரவு பெற சம்ந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ) பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்:-

அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சி

மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர் -
Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் மாநகராட்சி - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை மாநகராட்சி - 
http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி மாநகராட்சி -

https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி மாநகராட்சி
- http://tirunelvelicorp.tn.gov.in/download.html

பிறபபு சாண்றிதழ் திருத்தம் செய்ய வழி:-

           கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற்ந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க) இது பெரிய சிக்கலை உருவாக்குக்கு கின்றது.

           கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சாண்றிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக்கொள்ளலாம்ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக்கொள்ளலாம்
பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள்.

                  குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சாண்றிதழ் இருக்கும் இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும்

               உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்




நன்றி,...............
https://www.facebook.com/photo.php?fbid=292040800962755&set=pb.226441914189311.-2207520000.1402640867.&type=3&theater

16 April 2014

பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?



         
         சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.       

கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.     தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர்.இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு  செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு,ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
       

       இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்கள் விவரம்:

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை:  வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி,சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்...

நன்றி,...............
http://tamilveangai.blogspot.in/2013/01/blog-post_9826.html 

நிலத்தை வாங்கப்போகுமுன்-நம்மில் பலபேருக்கு தெரியாது

அப்ப‍டின்னா!....................        

               
  நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களை யும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோம். ஆனால் இதில் எத்த‍னை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும். கேட் டா, அட என்ன‍ சார், நீங்க இதெல்லா ம் அவசியமா, நிலத்தை வாங்கினோ மா, சில வருஷ கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை பார்த்தோமா இருக்க‍ணும். சார். அப்ப‍டின்னா சொல்லுவாங்க• ஆனால் நிலத்தோடு அளவீடு எவ்வ‍ளவு அவசியம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. அவர்களுக்காகவே நில அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள‍ இந்த பதிவை நிலவைதேடி வெளியிடுகிறது

நில அளவீடுகள்,...................

  • 1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
  • 1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
  • 1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
  • 1 ஹெக்டேர் – 10,000 சதுர அடி
  • 1 சென்ட் – 435.6 சதுர அடி
  • 1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
  • 1 குழி – 144 சதுர அடி
  • 1 சென்ட் – 3 குழி
  • 3 மா – 1 ஏக்க‍ர்
  • 3 குழி – 435.6 சதுர அடி
  • 1 மா – 100 குழி